Visit blogadda.com to discover Indian blogs Sukumar's Page

Pages

Monday, October 22, 2012

My Experiences with Nano LX - Part 8

Bangalore-Kulithalai-Bangalore:
On 24-Feb-12, I started my journey to Kulithalai( near Trichy) from Bangalore in my chariot(Nano). The second long drive of the month. As usual I started by 8 pm, reached Krishnagiri A2b Restaurant at 10 pm. (40 km on state highway and 30 km on NH). After 1 hour break, I started from there. Listening to songs,enjoying the fresh air, I kept continous clocking of 70-90kmph.
Often , I touched 100kmph mark. But controlled myself to be in safe bet of 90kmph. Many Volvo buses of KPN,ABT,KSRTC are overtaking at high speed. I overtook them as well quite a few number of times. Whenever a KPN bus is behind me, I hardly give them way, but for others, I leave them to go. I drove on par with many Santro's , I10's,Swift's. My friend was watching all this with surprise,because this wont happen always.

The 160km stretch from Krishnagiri A2B to Salem was covered in a mere 2 hrs 30 mins with a 10 min break in between. My friend's surprise got bigger for every drive with the way Nano performed. Durability was excellent.No wonder that Tatas had filed 37 patents for Nano design. Light weight vehicle with nice reliablity,mileage,durablity,manuvouerblity. All at a much better price in the hatch back segment.

From Namakkal, I had to go in Statehighway for a 50km distance, which I covered in 45 minutes. There were many Trucks passing by, mostly heavy trucks and sand carriers. The quality of headlights is amazing in Nano, much better than those in the hatch back category.

Many people feel that the ordinary steering and drum brakes are negatives of Nano. For a car , weighing just 630kg, disc brakes or ABS is not required at all, drum brakes are more than suffiicient to give the required braking. On the ordinary steering, it is sufficient for the light weight design, if a power steering is used, it will tilt the vehicle due to the centrifugal force and the light weight design, which people do not understand. Even if those are given, the price will get increased, again that will become another negative.

Many people think they are smart enough and ask for the above. Its like asking for a bluetooth head and a memory card to use with a Nokia 1100. When the design is made fool proof and the sufficient features are given, people expect for more than what is required because those features are available in some other cars.

I covered 275km in 6 hours with almost 1 hr 15 min break in between. Wont this be sufficient for a car whose worth is 2.25 lakhs?

The return journey is almost the same as well. Started at 8pm from Kulithalai, reached Salem at 10 pm. The stretch was 100 km , but there was good amount of traffic in the state highway till Namakkal. I was to pick up my friend at Salem. There we took a 30 min break and then started our journey. Once reaching Dharmapuri, we went for another 30 min break because of our tiredness, due to attending functions.

Again at Krishnagiri, we went for a 15 min break, then we travelled at a good speed. After reaching Bangalore, we took the city route instead of the state highway because of midnight travel. We reached finally at 2 am at Whitefield. This added to the surprises of my colleagues and they kept asking more and more about the performance.

The performance it is giving made them feel good. They felt Nano is a worth buy.

More to be continued..................................





Tuesday, September 18, 2012

என் காதல்-16

அவள் குடும்பம் ஊருக்கே சென்றது
அவள் விடுதியில் தங்க நேர்ந்தது
அது எங்களுக்கு சாதகமாய் ஆனது
அவளை நினைத்த பொது காண கொடுத்து வைத்தது

மீண்டும் பனி கிடைத்தது
மீண்டும் மீண்டும் சந்திக்கும் வைப்பு பெருகியது
மீன் போல் துள்ளி குதிக்க தோன்றியது
மீதமின்றி காதலை பகிர்ந்த உணர்வித்து

மாறினால் அவள் மற்றொரு விடுதிக்கு
மணாளன் தங்கி இருக்கும் பகுதிக்கு
மாலை நேரம் சந்திப்பு
மனதில் தினமும் தித்திப்பு

அறிய வாய்ப்பிது எங்களுக்கு
ஐந்து நிமிடங்களில் சந்திக்கும் வாய்ப்பிது
அவளுக்கு பெரும் வியப்பிது
அளவற்ற சந்தோஷம் குடி கொண்டது

மாதம் ஒன்று கடந்தது - என்
மாமியாருக்கு சந்தேகம் வந்தது
மாற்றிவிட்டால் அவள் நிவாசத்தினை
மன பாரத்தில் எங்கள் மனதினை

நோண்டி துளைத்தனர் கேளிவிகளால்
நோகடித்தனர் சுடு சொற்களால்
நோக்கும் வாய்ப்பு பறிபோனதால்
நொந்த மனங்களில் புலம்பல்கள்


============================தொடரும்

என் காதல்-15

  போட்டி ஒன்று வந்தது
பிறந்த நாளுக்கு யார் முதல்  வாழ்த்துவது
பிறப்பிலே போட்டிகளை எதிர்கொள்பவன்
பிறந்த நாள் வாழ்த்தில் தோர்பானேன்!

இரவு  பதினொன்று ஐம்பது
இம்மியளவும்  பிசகாது  அவளை  அழைத்து
இசை  பாடினேன்  சிறிது
இனிமையாய் கூறினேன் வாழ்த்து

ஈன்றவர்கலிம் வாழ்த்து பெற்றாள்
ஈஞ்சம்பாக்கம் செல்லவேண்டும் என்றாள்
ஈ  போல  பறந்து வர சொன்னாள்
ஈர்த்துக்கொண்டு செல்ல எண்ணினாள்

சாய் நாதனை தரிசித்தோம் 
சகலமும் நலமாய் முடிய வேண்டினோம் 
சந்தோஷமாய் முதுகலை பதிவினை நிரப்பினோம்
சாரலில் நனைந்து திரிந்தோம்
 
வேதம் படம் பார்க்க தோன்றியது
வேறு எண்ணம் இன்றி அதை மதி செய்ய துடித்தது
வேகமாய் சீட்டுகள் பெற்றாகிவிட்டது
வேர்க விருவிருக்க அரங்கினில் சென்றகி விட்டது

இனிதாய் கதைத்தோம்
இன்பமுடம் என்றும் இருக்க எண்ணினோம்
இன்று போல என்றும்  அமைய வேண்டினோம்
இனிய பண்ணிசைத்து விடை கூறினோம்

==============================================தொடரும்

Monday, September 17, 2012

என் காதல்-14

உண்ண மறப்பது 
உட்ற்றர் உறவினரை பொருட்படுத்தாதது 
உலகினை துறப்பது 
உள்ளத்தால் வாழ்வது 

ஊருலகம் தவிர்த்து 
ஊஞ்சலாடி திரிந்து 
ஊசலாடினாலும் கண்டுகொள்ளது 
ஊதாப்பு போல மென்மையானது 

ஏக்கம் கொடுப்பது 
ஏங்கி தவிக்க வைப்பது 
ஏறுமுகம் கொண்டது 
ஏமாற்றம் நிறைந்தது 

ஐய்யங்களுக்கு இடம் கொடுக்காதது 
ஐய்யமின்றி சிறந்து விளங்குவது 
ஐயம் தோன்றின் உடைந்து போவது 
ஐம்புலன்களையும் ஆட்டி வைப்பது 

ஒன்று சேர வைப்பது 
ஒன்றாய்  இருக்க தூண்டுவது - இரு உள்ளங்களை 
ஒன்றென செய்வது - உலகை 
ஒன்றிணைக்க வைப்பது 

ஓடா நிலை பெற்றது - பல தூரம் 
ஓட வைப்பது - நீர் 
ஓடை போல் சிலிர்ப்பூட்டுவது 
ஓடி ஓடி உழைக்க வைப்பது 

ஔவையார் பாடியது 
ஔவையை பாட்டியக்கியது 
ஒளஷதமாய் இருப்பது 
ஒள லா என சிறகடிக்க வைப்பது 

காதலை பல கோணங்களில் பார்ப்பினும் 
கண்விழிகளில் என்றும் அவள் தோற்ற்றம் 
காலமெல்லாம் அவள் நேசம் - எனக்கு 
கிட்டவேண்டும் என்றும் அவளின் பாசம் 

வேலை தேடல் மும்மரம் 
வேண்டுதல்கள் பல்லாயிரம் 
வேலை கிடைப்பது பெருங்கஷ்டம்
வேலை கிட்டவில்லை எனின் பெரும் நஷ்டம் 
 
பல நாள் கனவு - முதுகலை 
பட்ட படிப்பு 
பல முறை யோசித்து 
பளிங்கென எடுத்தோம் முடிவு!

அவளின் பிறந்த நாள் - என் 
அன்பு இவ்வுலகில் மலர்ந்த நாள் 
அன்பளிப்பு கொடுக்க திணறிய நாள் - என் 
அரவனைப்பில் அவள் மிகுந்த மகிழ்ச்சி கொண்ட நாள் !

======================================== தொடரும் 







என் காதல்-13



பிரச்சினைகள் எத்துனை வந்தாலும்
பிரியாது வாழ்வோம்
பிரிவென்பது காதலுக்கு இல்லை என்போம்
பகுத்தறிவு கற்பிப்போம்

அளவில்லா அன்பினை தேக்கி வைத்தேன்
அவளிடம் அத்துனையும் சேர்பித்தேன்
அளவற்ற்ற காதலை பகிர்ந்தேன்
அலைகள் ஓயாது என்பதை உணர்ந்தேன்

தினம் தினம் அவளை காண எண்ணினேன்
திரைகள் அனைத்திலும் அவள் முகம் படித்தேன் - கண்
திறந்ததும் அவளை கண்டு மகிழ்ந்தேன் - என்
திறனை கண்டு  அவளை வியப்படைய வைத்தேன்

கண்விழித்ததும் அவள் முகம்
காதுகளில் அவள் கானம்
கால்களில் மெல்லிய நடனம்
காதலில் சிறிது மயக்கம்

குழந்தையை நேசிப்பது போல நேசித்தேன்
குழைந்து குழைந்து அன்பை செலுத்தினேன்
குழையா வண்ணம் காதலை பெருக்கினேன்
குறைபாடுகளை மெல்ல குலைத்தேன்

ஆயிரம் காலத்து பயிர் இது
ஆண்டவன் கருணை அவசியமானது
ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட காதல் போன்றது
ஆதம் இவளிடம் இருந்து தொடங்கியது

அனார்கலி சலிமினால் வாகை சூடியது
அம்பிகாபதி அமராவதி மூலம் வளர்ந்தது
அணைத்து ஜீவராசிகளிடமும் இருப்பது
அன்னையின் அன்பையும் மிஞ்சியது

இன்னல்கள் பல நிறைந்தது
இனிமையான நினைவுகளை கொண்டது
இவ்வுலகினை மறக்க செய்வது
இமயத்தை விட பெரியது

ஈர்பிலே ஆரம்பிப்பது
ஈர்த்த பின்னர் விலகாதது - புவி
ஈர்ப்பினை விட பன்மடங்கு வலியது
ஈட்டி முனை போல் கூர்மையானது

எவரை கண்டும் அஞ்சாதது
எவ்வாறேனும் ஒன்று சேர துடிப்பது
என்றும் அழியாதது
எவரையும் வெல்வது

========================== தொடரும்






என் காதல்-12

கனவுலகில் வாழ்வது இனிமையானது
கனவுகள் என்றுமே தித்திப்பானது
காரிருள் சூழ்ந்தது போல் தெரிந்தது
கருவரையில் இருப்பது போல உணர்விது

நினைவுலகம் கொடுமைகள் நிறைந்தது
சந்தோசம்  மிகுந்தது
சண்டைகளுடன்  கூடியது
சச்சரவுகள் உடன் நகர்வது

வாழ்ந்தே ஆகவேண்டும்
பெற்றோரின் சம்மதம் பெற்றே ஆகவேடும்
உற்றார் உறவினரின் ஏச்சுக்கு ஆலகதிருக்கவேண்டும்
உண்மையாய்  என்றும் இருக்க வேண்டும்

மனதில் கோஷங்கள் பல
மண்டையில் ஆக்ரோஷங்கள் பல
மதியில் தோன்றுது அழ
மரணங்கள் என்னுள் சில 

நித்தமும் சந்தோசம்
அணு தினமும் ஏக்கமும்
இரண்டும் கலந்த கலவை
இந்நாளின் என் வாழ்கை

பெரும் பிரச்சினை ஒன்று
சாதி என்ற பெயரில் இன்று
அதை முறியடிப்பது  எவ்வாறு
சமுகத்தை சிறிது தூர்வாரு

தினம் தினம் அலுவலும்
நித்ததும் நினைவில் அவளும்
சலனமின்றி கால்களும்
சிந்தனை இன்றி நானும்

கவலைகள் பல
சந்தோஷங்கள் பல
கனவுகள் பற்பல
சண்டைகள் அவளுடன் சில

அவளின் கல்வி முடிந்தது
அவள் பணிக்கான தேடல் துவங்கியது
அனைத்துமாய் நான் இருந்தேன்
அவளுக்காக பனி தேடினேன்

கிடைத்தது ஒரு வேலை
அதுவும்  வாரத்தில் ஆறு நாள் வேலை
அவளுக்கு அது பிடிக்கவில்லை
அவளை வருத்த எனக்கு விருப்பமில்லை

ஆகவில்லை ஒரு மதம் கூட
கூறினேன் அவளிடம்  அதை நிறுத்திட
எனக்காகவே அவள் மீண்டும் பணி தேடினாள்
அப்படித்தான் நாங்கள் சந்திக்க இயலும் என்றாள்

============================================ தொடரும்






Friday, September 14, 2012

என் காதல்-11

  செய்து கொடுத்தேன் சத்தியம் ஒன்று
நான் இனி புகைப்பது இல்லை என்று
அது அமலில் ஆனது இன்று
அவள் அனுமதிப்பது என்று?

அவள் நினைவுகளிலே பயணித்தேன்
அனைத்தையும் மறந்தேன்
அவளின் புண் சிரிப்பில் மயங்கினேன்
அவள் இன்றி வாழ்வில்லை என முடிவெடுத்தேன்

நினைவலைகள் எங்கோ சென்றன
நினிவினில் ஏதும் நில்லாமல் இருந்தன
நித்தமும் அவள் எண்ணங்கள் எழுந்தன
நிஜத்தினில் எண்ணங்கள் இருக்க மறந்தன

வாழ்வியல் தத்துவம் புரிந்தது - என்
வாழ்க்கை அவளுக்கென தெரிந்தது
வாழ்நாள் முழுவதும் அவளுக்கு அர்பணித்து
விண்ணுலகில் அவளுடன் பயணித்து

அவள் வீடு சென்றடைந்தாள் என செய்தி வந்தது
அளவில்லா இன்பம் உள்ளத்தில் தோன்றியது
அவளுடன் பேச ஆர்வம் தூண்டியது
அவள் வீட்டில் இருக்கிறாள் என்பது தடையாய்  நின்றது

சேர்ந்தேன் வீட்டிற்கு
சந்தோஷத்தில் தத்தளிப்பதற்கு
சண்டைக்கு இழுப்பதற்கு - இருக்கின்றனர்
சிநேகிதர்கள் என்றைக்கும்

உண்டேன் உணவினை
உடனே தட்டினேன் குருன்செயிதியினை
உறங்க தொடங்கலானேன்
உறக்கத்தில் ஆவலுடன் வாழ ஆரம்பித்தேன்

கனவுலகில் இருவரும் சேர்ந்தோம்
கள்ளங்கபடமின்றி வாழ்ந்தோம்
காதல் மிகுதியாய் பகிர்ந்தோம்
கணவன் மாணவி என வாழ்ந்தோம்

============================= தொடரும்




என் காதல் 10

நெருங்கிவிட்டாள் அவள் என்னை
பகிர்ந்தாள் அன்பினை தன்னை
அன்பிலே அவள் அன்னை
ஆட்கொண்டாள்  முழுதாய் என்னை

பேருந்தில் ஏறினோம்
பெருமூச்சு விட்டோம்
பயண சீட்டு பெற்றோம்
பயணம் தொடங்கினோம்

கோயம்பேடு முதல் கானத்தூர் வரை
காதோடு காதாக சிலாகித்தோம்
கடும் வெயில் என்றதையும் மறந்தோம்
கானத்தூர் சென்றடைந்தோம்

சிங்க கர்ஜனை பார்க்க தயாரானோம்
சிணுங்கள் குலுங்கலுடன் சுற்றி வந்தோம்
சிங்கம் திரியாரங்கினுள் நுழைந்தோம்
சிரிப்பு வெள்ளத்தில் தவழ்ந்தோம்

எங்கள் ஜோடியை பார்த்து பலர்
எடுத்த கண் வாங்காமல் பார்த்தனர்
எவ்வளவு கண் வைக்கமுடியுமோ வைத்தனர்
எங்களுக்கு அது பொருட்டில்லை என்பதை உணராதிருந்தனர்

சூர்யா அனுஷ்க ஜோடி பொறுத்தமா - இல்லை
சூர்யா ஜ்யோதிகா ஜோடி பொறுத்தமா  - இல்லை
எங்க ஜோடி பொறுத்தமா - இவ்வளவு கேள்விகள்
எங்களுக்குள் - இப்படி தான் தொன்றும காதலித்தால்?

கானத்துரிலிருந்து திரும்பினோம்
ஈஞ்சம்பாக்கம் சென்றோம்
சாய் நாதனை தரிசித்தோம்
சகலமும் நலமாய் முடிய வேண்டினோம்

மனதுள் எதோ தெரிய நிம்மதி
மங்கை அவள் கண்களில் முழுமதி
மனாளனின் கை கோர்த்த வெகுமதி
மனங்களால் ஒன்று சேர்வோம் நங்கள் என்பது விதி

வாடிக்கை போல உள்ளது
வருத்தமெல்லாம் தீர்ந்தது - மதி
வாகை சூட வந்தது - அவளின்
வருகையில் பூரிப்படைந்தது

மாலை வீடு திரும்ப வேண்டும்
மீண்டும் தற்காலிகமாய் பிரியவேண்டும்
மனதால் ஒன்று பட்டாலும்
மனதில் வேதனை விலகாது போலும்

வழி அனுப்பி வைத்தேன் அவளை
என் மனதில் ஆரம்பித்தது பெரும் ரகளை
இந்த பிரிவு வாட்டி எடுக்குது எங்களை
பரிமாறிக்கொண்டோம் அளவற்ற காதலை

அவள் கெளம்பும் வரை கண்கொட்டாமல் பார்த்தேன்
அவளும் என்னை அவ்வாறே நோக்கினாள்
இனம் புரிய வேதனையில் எங்கள் உள்ளங்கள்
காதலர்களுக்கு இவையெல்லாம் அன்றாட வரும் இன்னல்கள்

வீடு திரும்ப வேண்டும்
பேருந்தில் ஏற வேண்டும்
ஏனோ தெரியா வெற்றிடம்
எனக்கு எங்கே புகலிடம்

அவளிடம் அலைபேசியில் பேசினேன்
அபரிமித ஜக்கிரிதை வேண்டுமென்றேன்
அவளின் விம்மல் கேட்டு அலறினேன்
அவளின் கண்ணீர் துடைக்க எண்ணினேன்

மொக்கையாய் பேசினேன்
மெல்ல சிரிக்க கண்டேன்
மெதுவாய்  எடுத்து சொன்னேன்
மெல்ல நானும் கெளம்பினேன்

நண்பர்களின் காலாய்ப்பு
வந்தது அவர்கள் மேல் வெறுப்பு 
அவள் கண்களின் ஈர்ப்பு
அவள் என்றுமே எனக்கு இனிப்பு 

================================== தொடரும்



என் காதல்-9

சென்னை வந்தடைந்தேன்
சீராக விமானநிலையம் விட்டு வெளியேறினேன்
சுறுசுறுப்பாக  வாடகை வண்டியை பிடித்தேன்
சந்தோஷமாய் என்னவளிடம் பேசத்தொடங்கினேன்

நாளை  சந்திக்க வேண்டும் என்றேன்
நான் சித்தம் என்றாள்
நகைப்பு  நிறைந்தது மனதில்
நன்றி என்று கூறினேன்

வந்தது அவளுக்கு பெருங்கோபம்
விடாது திட்டிக்கொண்டே இருந்தாள்
விஷயம் என்ன என்பதை புரிந்து கொண்டேன் - அதை
விட்டு விட மன்றாடினேன்

காதலில் நன்றிக்கு இடமில்லை
கடுகலவிற்கும் மன்னிப்புக்கும் இடமில்லை
காலம் முழுவதும் புரிதலே
கன நேரமும் இல்லை சந்தேக நெருடலே

வந்து சேர்ந்த நேரம் அதிகாலை
வரம் கொடுத்தாள் என் தேவதை
விமான பயண களைப்பு வருடுதே
வின்மீன்கள் கன் சிமிட்டுதே

உறங்க ஆரம்பித்தேன்
உறக்கம் இன்றி தவித்தேன்
உலக அழகியை காண துடித்தேன்
உருண்டு உருண்டு புரண்டேன்




அதிகாலையிலே கண் விழித்தேன்
அவசரமாய் கெளம்பினேன்
அவளை காணும் ஆவலுடன் இருந்தேன்
ஆவலுடன் கனவுலகில் உலவினேன்

பேருந்து நிலையம் சென்றேன்
பேரழகியின் வருகைக்கு காத்திருந்தேன்
பேசிக்கொண்டே இருந்தேன் - அவள் சொன்னாள்
பேரழகா உன்னை நெருங்கிக்கொண்டே இருக்கிறேன்










 

Thursday, September 13, 2012

என் காதல்-8



சொன்ன விதம் பிடிக்கவில்லை
சொல்லியே விட்டாள்  அதனை
சொற்களை  தேடினேன் அவளை
சமதானமக்க - என்ன சொன்னாலும் கோபம்  குறையவில்லை

சொல்லிவிட்டேன் என்ற மகிழ்ச்சியும்
சொன்னது சரிவர இல்லை என  இகழ்ச்சியும்
சூழ்ந்து என்னை வாட்டிய வதைப்பும்
சுருங்கிய என்  மனமும்

தவிப்பு அடங்கிப்போனது
தூக்கம் விலகி சென்றது
தனிமை சூழ்ந்து கொண்டது
தாங்க முடியா வலி ஆட்கொண்டது

என்ன கொடுமை இது
என்னை மட்டும் வாட்டுது
என் விரோதிக்கும் இது நேர கூடாது
என்னவளிடம் இருக்க கூடாது

பணிக்கு சென்றேன்
பிடிப்பிள்ளது இயங்கினேன்
பரவசம் இன்றி சிரித்தேன்
பாரத்துடன் தடுமாறினேன்

குறுஞ்செய்தி பரிமாற்றம்
காதல் அரங்கேற்றம்
கண்களில் பெரும் ஏக்கம்
காண வேண்டும் என அசைகள் ஓராயிரம்

அழைத்தேன் அவளை
அன்பாக சொன்னேன் காதலை
ஏக்கம் தாங்க முடியவில்லை
என்றும் எங்களுக்கு வானமே எல்லை

அவள் ஒப்புக்கொண்டாள் - இம்முறை
அலைக்கழிக்காது என்னை - மறுமுறை
அழைத்தேன் அவளை - பகிர்ந்தேன்
அளவற்ற்ற காதலை

அன்றிரவு என் சென்னை பயணம்
அளவில்லா  மகிழ்ச்சியில் என் மனம்
ஆடி பாடி கொண்டே சென்றேன்
அவளை மகிழ்வித்து கொண்டே வந்தேன்

கனம் யுகமாவது இது தானோ
காதல் என்றாலே இருக்குமோ
காண துடிக்கும் ஏக்கமோ
காத்திருக்க தான் முடியுமோ?

விமான நிலையம் வந்தேன்
விரைவாக  பயண சீட்டு பெற்றேன்
வேகமாய் ஆய்வுகளை முடித்தேன்
விமான நேரத்திற்கு காத்திருந்தேன்

அறிவிப்பு கேட்டேன்
அலறி அடித்து ஓடினேன்
அமர்ந்த பின்னரே  சுவாசித்தேன்
ஆழ்ந்த  சிந்தனையில் மூழ்கினேன்

முழுவதும் அவள் நினைவுகளே
மதியினில் அவளுடன் இருந்த கணங்களே 
மனதினில் பொங்கின அலைகளே
மயக்கத்திலும் தோன்றுகின்றன அவள் கண்களே

அலைபேசியை எடுத்தேன்
அவள் எண்ணை அழைத்தேன்
ஆவலுடன் காத்திருந்தேன்
அவளுடன் சல்லாபித்தேன்

அழகிய மங்கை அறிவித்தாள்
அனைத்து மின்னணு கருவிகளையும் அணைக்க சொன்னாள்
அவளிடம் அதை கூறினேன்
அனைத்து விட்டேன் என் அலைபேசியை

விமானம் இயங்க தொடங்கியது
வியர்த்து கொட்ட ஆரம்பித்தது
வியப்பாய் எனக்கு  இருந்தது  -அதற்கு
விடை தெரியாமல் இருந்தது

பறக்க ஆரம்பித்தோம் விமானத்தில்
பாரம் குடிகொண்டது என் மனதில்
பரந்து காணும் வானில்
பரதேசியாய் நான் என்ற தவிப்பில்

திருமலையை நெருங்கினோம்
திருவேங்கடன் ஆலயத்தினை விண்ணிலிருந்து தரிசித்தோம்
திருப்பொன்னால் அலங்கரித்தை கண்டு வியந்தோம்
திருவருள் பெற்றது போல் உணர்ந்தோம்

மனதில் பெருங்குழப்பம் - என்
மனராணி கண்கள் அழகானதா ? - இல்லை
மஹா விஷ்ணு வேங்கடனின் கோபுரம் அழகானதா?
மடத்தனமோ இது எனக்குள்ளே???

============================================ தொடரும்