மாற்றங்கள் வந்ததற்கு நானே காரணம்
மதி முழுதுவம் அவளின் மேல் காதல் ஓவியம்
மனதில் உள்ளதை கூற என்னிடம் தாமதம்
மறந்து போனேன் நான் அனைத்தையும்
நாழிகைகள் மனிதுலகல் போல கரைந்தன
நான் என்ற எண்ணங்கள் என்னுள் மறைந்தன
நயாகரா போல காதல் அலைகள் பொங்கின
நடுவில் யாரேனும் அழைத்தல் கோப கனல்கள் எழுந்தன
அவள் குரல் கேட்காத நேரம் -
கணங்கள் யுகங்கலாயின
காலனின் பாச கயிறுகள் தெரிந்தன
காரணமின்றி கால்கள் நடந்தன
காதலை மறைக்க முயலாது நாடி துடிப்புகள் திணறினநாட்கள் நகர -எங்கள் மனங்களின்
நெருக்கம் கூட -பரிதவிப்பு அடங்க
நேசம் நெறைய - காதல் பெருக
இன்ப வெள்ளம் பொங்க - இனிமையாய் எல்லாம் அமைய
காதல் புறாக்கள் பறந்தன
காதலுடன் ஊர் சுற்றி திரிந்தன
தினமும் பார்க்க துடித்தன
எப்பொழுதும் பேசி மகிழ்ந்தன
காதல் கட்டுக்கண்டகாமல் வளர்ந்தது
காதலை சொல்ல மட்டும் முடியாமல் போனது
காலம் விடை சொல்லவும் மறுத்தது
காதல் எங்கள் மனதை வதைத்தது
அவள் தேர்வுகள் நெருங்கின
அவளின் தவ்விபுகள் கூடின - ஒரு பக்கம்
அவளை ஆட்கொண்ட நான் - மறுபக்கம்
அவளின் கடைசி தேர்வுகள் இளங்கலையில்
மனதில் வலி ஒரு பக்கம்
உடலின் வலி மறுபக்கம்
தேர்வுகளுக்கு படிக்கவேண்டிய கட்டாயம் இப்பக்கம்
அவள் என்னத்தான் செய்வாள் அப்பக்கம் !
உதவ முயன்றேன் நான்
அதை கூறினேன் அவளிடம்
மகிழ்ந்தாள் மிகையாக
முத்தமொன்று குடுத்தாள் அன்பளிப்பாக!
அவளுக்கு என் மேல் இருப்பது காதலா?
அவள் குடுத்த முத்தம் அதன் வெளிப்பாடா?
அரும்பும் கேள்விகள் என்னுள்
அதற்கு பதில்கள் தேடவேண்டும் அவள் மனதில்!
தயங்கினேன் நான் அதை கேட்க
தயார்படுத்த வேண்டும் அவள் தேர்வினை எதிர்கொள்ள
தலையாய கடமையாய் நிற்குது என் முன்னே
தடுமாற்றமின்றி முடித்துவிடுவோம் கண்ணே
படித்தாள் அவள் நன்கு
பயமின்றி எழுதினாள் தேர்வு - அவள்
பக்கமே வரவில்லை மன சோர்வு
பற்றிக்கொண்டது உடல் சோர்வு
கல்லூரி வாழ்வில் கடைசி நாள் - நண்பர்களுடன்
கலந்துரையாடலின் தற்காலிக கடைசி நாள்
காத்திருந்தேன் அவளின் அழைப்பிற்கு
கன மனத்துடன் அவள்- அப்பால் தொடர்பு எல்லைக்கு!
பிரியா விடை கொடுத்தாள் நண்பர்களுக்கு
பிரியத்துடன் அழைத்தாள் எனக்கு
பரிதவிப்புடன் சொன்னாள் - "சோர்வு எனக்கு"
பரிதாப நிலையில் எங்கள் மனக்கணக்கு!
நிம்மதியாய் உறக்கத்தில் அவள்
நிம்மதியின்றி தவிப்பில் நான்
நியாயமா இது பிரம்மா தேவா?
நிமிடமாவது நீ இந்த வேதனையை உணர்வாயா?
கன நேரமும் நிம்மதியில்லை - என்றும்
காணாத அன்பு தொல்லை - அவளையும்
குறை சொல்வதற்கில்லை - நெஞ்சமோ எதையும்
கேட்கும் நிலைமையில் இல்லை !
தூக்கமின்றி தவிக்கையில் தோன்றியது ஒரு விதை
நந்தசிவபாலனின் மணிமேகலை உரைநடை கவிதை
எடுத்து வாசிக்க தொடங்கினேன் - மனதில் அரும்பியது
இப்படித்தான் மணிமேகலையும் தவித்தலோ வந்தியதேவனுக்காக??
மணிமேகலையின் காதல் உண்மையோ?
மனத்தவிப்பில் என்னை மிஞ்சியவளோ?
மதி நுட்பத்தில் என்னவளை வெல்வாளோ?
மனத்தால் காதலை பரிமாறுவதில் எங்களை தோற்க்கடிப்பவளோ?
என்ன இது மடத்தனம் ?
எனக்குள் ஏன் இந்த பைத்தியம் ?
என் காதல் ஆகுமோ அழியா சரித்திரம்?
எனக்குள் வருமா நிதானம்?
அலுவலகம் செல்ல நாட்டமில்லை
அலுவலுக்கு செல்லாவிட்டால் சம்பளமில்லை
அலை கடல் போல் என் மனம்
அழைத்தாள் என்னை அலைபேசியில் அக்கணம்!
....................................................................................தொடரும்
No comments:
Post a Comment