Visit blogadda.com to discover Indian blogs Sukumar's Page: March 2011

Pages

Wednesday, March 2, 2011

என் காதல் !!!!!

என் வாழ்வில் மலர்ந்தது மொட்டு
என் மனதில் பறந்தது சிட்டு
உன் கண்ணிமை அழகிய பட்டு
எங்கு செல்வாய் நீ என்னை விட்டு

செங்கமலம் போல் நீ மலர்ந்தாய்
சேரவேண்டும் உன்னுடன் என தவிக்கவைத்தாய்
உனது ஓர விழியில் என்ன கிறங்கவைத்தாய்
பாசத்தில் என் தாயை மிஞ்சிவிட்டாய்

வெட்கி நீ தந்த புண் சிரிப்பு
என்னுள் தொடங்கியது பரிதவிப்பு
என் மனம் தூணாய் நிற்கும் இரும்பு
உன்னை தேடி ஆனேன் நான் வெறும் துரும்பு

என்னை தேடி நீ வந்தாய்
என்னுள் வந்து குடி கொண்டாய்
கண்களிலே காதலை சொன்னாய்
என் கண்ணிமையாய் நீ ஆணாய்

தினமும் நம் கண்கள் சந்திக்கும்
கண் பார்வையிலே காதலை பரிமாறும்
என்றும் நம் உள்ளங்கள் அரவணைக்கும்
உன்னை காண என் மனம் ஏங்கும்
கண்டபின் உன் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்

கண்களிலேகாதலை பகிர்ந்தது
உள்ளத்தில் நேசம் உணர்ந்தது
நம்மை சூழ்ந்த உலகம் மறந்து
சிறகற்றே பறந்தோம் நாம்

சுவர்க்கத்தில் திரிந்தோம் தினம் தினம்
உன்னை காணாது உறக்கம் இல்லை
என்னை காணும்வரை உன்னுள் புன்னகை பூப்பதில்லை
நம்முள் இருப்பது வெறும் ஈர்ப்பில்லை
இது தன நம் காதலின் அழகிய தொல்லை

வருடம் ஒன்று சென்றது
நான் விடை பெரும் நேரம் வந்தது
மனதில் கலக்கம் சூழ்ந்தது
உன்னடுன் இருக்க மனம் ஏங்குது

கண்ணீருடன் நீ வழி அனுப்ப
என் கண்கள் முழுதும் நீர் நிரம்ப
என் கால்களின் நடை தயங்க
விடை பெற்றேன் வெற்றுடம்போட…

தனிமையில் தவித்தோம்
பிரிவால் வாடினோம்
பாசத்திற்கு ஏங்கினோம்
மீண்டும் காணவேண்டுமென துடித்தோம்

நொடிகள் யுகங்கலானது
பசியும்மறந்து போனது
கணம் கணம் காதல் வளர்ந்தது
மீண்டும் உன்னை காணும் நாள் வந்தது

வந்தன என் தேர்வு முடிவுகள்
காத்திருந்தன எனக்காக உன் விழிகள்
ஓடோடி வந்து கண்டாய் என் மதிப்பெண்கள்
பின்னரே கண்டாய் உன் உறவினர்களின் பெயர் பட்டியல்

உன் ப்ரியனின் பெயர் கண்டாய்
உள்ளம் குளிர மனமகிழ்ந்தாய்
என் வருகைக்காக காத்திருந்தாய்
உன் மணாளன் முதலாவதாக வரவில்லை என கண்ணீர் விட்டாய்

தாங்குமா இத்துணை காதல் என் மனம்
கண்கலங்கி நின்றேன் அக்கணம்
உன்னை கண்ட பூரிப்பில் மலர்வனம்
துள்ளி திரிந்தது என் வருகையால் உன் பாசமனம்

இன்றொரு நாள் தான் நம் கண்கள் சந்திக்கும்
பின்நெத்த்னை காலம் உள்ளங்கள் பரிதவிக்கும்
நாளையை எண்ணி நாம் வருந்தவேண்டாம் இக்கணம்

பரிமாறிகொள்வோம் பாசத்தை நாம்
உன் கண்ணீரில் கலங்கினேன்

என்னுடன் அழைத்து செல்ல எண்ணினேன்
வாழ்கையை சிறிது சிந்தித்தேன்
சொந்த காலில் நின்றபின் என்னவள் ஆக்கிகொல்வேன்
கிடைத்த கால்லூரி பல தொலைவு

என் மனதில் இல்லை நிறைவு
எப்படி தாங்குவோம் இப்பிரிவு
நீ இல்லை என்றல் நான் பூணவேண்டும் துறவு
உன்னை காண ஓடோடி வந்தேன்

உன் தெருவில் நாய்போல் அலைந்தேன்
என் காதலியின் கடைக்கண் பார்வை கிடைத்தது
என் உள்ளம் சந்தோஷத்தில் ஆட்டம் போட்டது
கல்லூரி செல்ல மனம் இல்லை

உன்னை பிரிந்து போக விருப்பமில்லை
ஏன் ஆண்டவா எங்களுக்கு இந்த அன்பு தொல்லை
நீ இன்றி என்றும் நான் இல்லை
சென்று சேர்ந்தேன் கல்லூரியில்

என் தூக்கம் முழுதாய் போனது அன்று முதல்
எப்படி இருக்கிறாள் என் தேவதை
நான் தந்துவிட்டேன் உன்னக்கு பெரும் சித்திரவதை
பிடிப்பில்லாமல் வழக்கை சென்றது

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது
நட்பில் மகிழ்ச்சி கொஞ்சம் கிடைத்தது
இருப்பினும் அது என் நெஞ்சை சிறிதே நிரப்பியது
வாழ பிடிக்கவில்லை

படிப்பிலும் நாட்டமில்லை
ஒரு பக்கம் கல்வி கடன்
மறுபக்கம் பெட்ட்றோரின் கனவுத்தொல்லை
மனதால் சிரித்து கடந்தன பல திங்கள்கள்

தினமும் என் பாதையில் ஆயிரம் முற்கள்
அங்கு வாடுகிறாள் அழகிய திருமகள்
அவளை காண நித்தம் ஏங்கின என் கண்கள்
ஊருக்கு சென்றேன் வழியில்

என் தேவதையை கண்டேன்
அவள் விழியில் காதலை கண்டேன்
மன நிறைவுடன் கல்லூரிக்கு வந்தேன்
மூன்று வருடங்கள் சென்றது

அவள் கல்லூரி செல்லும் நேரம் வந்தது
நாங்கள் என்றாவது சந்திக்கும் வாய்ப்பும் பறிபோனது
என் காதல் என் கை விட்டு சென்றது
ஏக்கத்தில் இருந்தேன் நான்

ஏங்கி தவித்தாள் அவள்
தினமும் கண்ணீருடன் எங்கள் கண்கள்
நான் அவளை மீண்டும் அடைவது எந்நாள்??
என்னை இன்னொருத்தி விரும்பினாள்
பாசத்தை பரிமாறினாள்

என் ஏக்கத்தை குறைக்க முயன்றாள்
அவள் பக்கம் என்னை திருப்பி கொண்டாள்
அக்கணம் செய்தேன் என் காதலுக்கு துரோகம்
என்றும் இது மன்னிக்க முடியாத குற்றம்

மனதில் ஒருத்தி இருக்க
இன்னொருத்திக்கு காதலனாய் நடிக்க
முடியவில்லை என்னால்
வெதும்பி போனேன் ஒவ்வொரு நாள் 


மீண்டும் அவளை சந்திப்பேனா
என் தவறை கூறி மன்னிப்பு கேட்பேனா??
கேள்விகள் மட்டும் என்னிடம்
பதில் இல்லை யாரிடமும்

விரக்தியின் உச்சதிருக்கு சென்றேன்
வாழ்கையை வெறுத்து நின்றேன்
எனக்கு தண்டனையை தேடினேன்
உயிர் துறக்க எண்ணினேன்

முயன்றேன் உயிர் துறக்க
அவள் இன்னும் காத்திருக்கிராளா எனக்காக
ஏங்கியது என் மனம்
பலிக்கவில்லை என் பிரயத்னம்

மீண்டும் வாழ்வில் வெற்றிடம்
இதை போக்க அவளால் மட்டும் தான் முடியும்
முதலின்என் இன்னோர் காதல் நடிப்பை நிறுத்தவேண்டும்
வந்தது அதற்கான கணமும்

சில பொய் கூறினேன்
என்னை காதலித்தவளிடம்
விலகி வந்தேன்
இவளையும் கண்ணீரில் வாடவைத்தேன்

நான் செல்லும் பதை எனக்கு தெரியவில்லை
எங்கு செல்கிறேன் என்றும் புரியவில்லை
கால் போகும் போக்கிலிருந்து நான் மாறவில்லை
இனிமேல் நான் வாழ்வதில் அர்த்தமும் இல்லை

கல்வி முடிந்தது
மீண்டும் தேடிச்சென்றேன் அவளை
எங்கும் அவள் காணவில்லை
எங்கு இருக்கிறாள் என்றும் தெரியவில்லை

பணியில் சேர்ந்தேன்
அலை உலகில் தினம் தினம் தேடினேன்
எங்கும் தெரியவில்லை அவள் முகவரி
என்னுள் குறையவில்லை காதல் வெறி

அயல் நாடு சென்றேன்
அவள் எண்ணங்களில் வாடினேன்
தனிமை என்னை சூழ்ந்தது
ஏக்கம் வாட்டி எடுத்தது

எதிலும் நட்டமில்லை எனக்கு
நீ மட்டும் போதும் இப்பிறவிக்கு
எங்கிருக்கிறாய் என் மனமே
வந்து என்னை சேரடி பொன்மேகமே

உயிர் துறக்கவும் முடியவில்லை
நீ எனக்கு கிட்டும் சுவடுகளுமில்லை
எதற்கு இனிமேல் எனக்கு இந்த வாழ்கை
ஆண்டவனுக்கும் என் மேல் கருணை இல்லை

நாடு திரும்பினேன்
மீண்டும் என்னவளை தேடினேன்
ஒரு முறையாவது காண துடித்தேன்
உயிரை விட சென்றேன்

மீண்டும் தோல்வியில் திரும்பினேன்
என்றும் போல் கணினியை தட்டினேன்
என் அதிர்ஷ்டம் அன்று வந்தது
வலை கடலில் அவளை கண்டேன்

அனுப்பினேன் நட்பு அழைப்பிதழை
தினம் தினம் தேடினேன் அவள் பதிலை
வாரம் ஒன்று ஆகியும் தகவல் இல்லை
யோகம் கிட்டியது ஒரு நாள் பிற் காலை

அவளுடைய மின்னஞ்சல் வந்தது
என் வாழ்விற்கு அர்த்தம் தந்தது
மீண்டும் மனதார சிரிப்பு வந்தது
என் தேவதை எனக்கு கிட்டியது

காதலை அன்றே சொல்ல எண்ணினேன்
தவிப்பால் ஏங்கினேன்
சொல்ல தாமதித்தேன்
அவளுடன் நெருங்க ஆரம்பித்தேன்

கைப்பேசி என்னை எனக்கு தந்தாள்
அவள் கல்லூரியில் சந்தித்த இன்னல்கள் கூறினாள்
என்னிடம் ஆறுதல் தேடினாள்
எனக்கு நெருங்க வாய்ப்பு தந்தாள்

தினம் தினம் தவிப்பு பெருகியது
எங்களின் நட்பு கூடியது
உள்ளங்கள் நெருங்கியது
நான் அவளை காணும் நாள் வந்தது

சந்தித்த கணம் சிலை ஆனேன் ஒரு நொடி
அவள் கண்களில் என் மேலுள்ள காதலை கண்டேன் அந்நொடி
இன்னும் நெருங்கினோம்
என்றும் பிரிவே இருக்கக்கூடாதென எண்ணினோம் …

சத்யம் திரையரங்கின் வாசல்
அன்று அது நம் காதலுக்கு அமைந்த சொர்க்கவாயில்
சுட்டெரித்தது வெய்யில்
பொங்கி மலர்ந்தது உள்ளத்தில் தேங்கி இருந்த காதல்

அமர்ந்தேன் நான் சற்று விலகி
கண்டுகொண்டே இருந்தேன் மனம் உருகி
சுட்டெரித்தாய் உன் கருவிழிகளை திருகி
உன்னருகில் சேர்ந்தேன் மனமறுகி

திரையில் ஓடியது காதல் காவியம்
நம் மனதில் படர்ந்தது காதல் ஓவியம்
இனி உன்னை அடைவேன் வென்று என் சாவையும்
உனக்கு நான் கட்டுவேன் மாங்கல்யம்

சேர்ந்திருந்தது சில மணி நேரம்
அதில் கண்டோம் ஆயிரம் பரவசம்
உன்னை விட்டு செல்ல மானமில்லை அக்கணம்
உன்னை அடைந்து தீருவதே என் புருஷ லக்ஷணம்

கண்கள் பரிமாறிய காதல்
நமக்குள் இல்லையடி மோதல்
நீ இல்லைஎனில் எனக்கு சுகம் சாதல்
அன்பை பகிர்ந்தன உன் கண்கள்

திரையை காண வில்லை நான்
உன்னை மட்டுமே கண்டுகளித்தேன் தான்
உன் சுவாசம் எனக்கு தேன்
அதை என்றும் பருகவேண்டும் நான்

வழியனுப்பி வைத்தேன் உன்னை வீட்டிற்கு
நான் சென்றேன் என் இடத்திற்கு
செல்லவேண்டும் உல்லாச பயணத்திற்கு
நண்பர்களுடன் அன்று ஊட்டிக்கு

வழியெங்கும் உன் எண்ணங்கள்
விழிமுழுதும் உன் சின்னங்கள்
உன் அழகை கண்டு வருடிய மல்லிகை மலர்கள்
நாம் தானடி உலகின் மிகச்சிறந்த காதலர்கள் …………….( தொடரும்)